இந்தியா

‘வெற்றிவேல்…வீரவேல்…’- கோவையில் முழங்கிய பிரதமர் மோடி!

Published

on

கோவையில் பாஜக பரப்புரையின் போது பிரதமர் மோடி ‘வெற்றிவேல் வீரவேல்’ என முழங்கி உள்ளார்.

கோவையில் தமிழகத்துக்கான நலத்திட்டங்களை முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பி.எஸ் முன்னிலையில் இன்று மோடி தொடங்கி வைத்தார். அதன் பின்னர் கோவையில் நடந்த பாஜக பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். வெற்றி வேல்… வீர வேல்… என கூறி பரப்புரையை தொடங்கிய மோடி, “மத்திய அரசின் திட்டத்தால் கோவையில் சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் அதிகளவில் பயனடைந்துள்ளன. சிறு வியாபாரிகள், விவசாயிகளுக்கும் மத்திய அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி தமிழ். தமிழர் திருவிழாக்கள் உலகளவில் புகழ்பெற்றவை. பொறியியல், மருத்துவம் போன்ற துறை படிப்புகளை உள்ளூர் மொழிகளிலேயே பயிற்றுவிக்க வேண்டும். இதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் அதிகப் பயன் பெறுவர். தமிழகத்தில் சிறு, குறு தொழில்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.

கோவையில் மட்டும் சுமார் 25 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மத்திய அரசின் திட்டம் மூலம் பயன்பெற்றுள்ளன. ஜவுளித்துறையை மேம்படுத்தவும் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் மத்திய அரசு முயற்சி எடுத்து வருகிறது” என்றார்.

seithichurul

Trending

Exit mobile version