இந்தியா

கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் தமிழ்நாடு வரும் மோடி; என்ன செய்யப்போகிறார்?

Published

on

கடும் எதிர்ப்புகளுக்கு இடையில் தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னை – டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தை மாலை காணொலி காட்சி மூலம் 3.15 மணிக்குத் தொடக்கி வைக்கிறார்.

மேலும் சென்னை கே கே நகரில் புதிதாகக் கட்டுப்பட்டுள்ள 470 படுக்கையறை கொண்ட ஈஎஸ்ஐ மருத்துவமனை கட்டிடத்தையும், பிபிசிஎல் முனையத்தையும், சென்னை துறைமுகத்திலிருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்குக் குழாய் மூலம் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் திட்டத்தையும் தொடக்கி வைக்கிறார்.

அரசு திட்டங்களைத் தொடக்கி வைக்கும் இந்த விழாக்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சபாநாயகர் பி தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கின்றனர்.

இந்த அரசு திட்டங்களை எல்லாம் தொடக்கி வைத்த பிறகு பிரதமர் மோடி பொத் தேர்தல் வருவதை முன்னிட்டு பாஜகவின் திருப்பூர் பொதுக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசுகிறார். இதற்காகச் சென்னை, திருப்பூர் மாவட்டங்களில் காவல் துறையினர் பாதுகாப்பிற்காகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

மறுபக்கம் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுவது, #GoBackModi என்று சமுக வலைத்தளங்களில் டிரெண்டிங் செய்வது போன்றவையும் எப்போதும் போல நடைபெற்று வருகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version