இந்தியா

இன்று ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் மோடி உரை.. என்னவெல்லாம் பேசுவார்!

Published

on

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் இன்று பிரதமர் மோடியின் உரை நிகழ உள்ளது.

அதிலும் ஐக்கிய நாடுகள் சபையின் 75 ஆண்டுக்கால வரலாற்றில் முதல் முறையாக, உலக தலைவர்கள் அனைவரும் காணொளி மூலம் தங்களது உரையை நிகழ்த்தி வருகிறனர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் ஐநா சபையில் ஆற்றிய உரையில், “இந்தியா 370வது அரசியல் அமைப்பு சட்டத்தை ரத்து செய்து, காஷ்மீர் தலைவர்களைச் சிரையில் அடைத்தது, துருப்புகளைக் குவித்தது, எல்லையில் பதற்றம் ஏற்படுத்தியது என இந்தியா மீது குற்றம்சாட்டிப் பேசினார்.” இதற்கு இந்தியத் தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்தது. மேலும் அதற்கு இந்தியா தரப்பிலிருந்து இந்த கூட்டத்திலேயே பதில் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர் மோடி இன்று மாலை 6:30 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் தனது உரையை நிகழ்த்த உள்ளார். அதில், சீன எல்லை பிரச்சினை, பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து எல்லாம் பிரதமர் மோடி பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version