இந்தியா

கொரோனாவால் பெற்றோர்களை இழந்த குழந்தைகள் நிதியுதவி வேண்டி விண்ணப்பித்த 51% மனுக்கள் நிராகரிப்பு!

Published

on

கொரோனா பொருந்தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பிஎம் கேர்ஸ் திட்டத்தின் கீழ் நிதியுதவி செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

இந்த நிதியுதவியைப் பெற நாடு முழுவதிலிருந்தும் 9331 விண்ணப்பங்கள் வந்திருந்தன.

அந்த மனுக்களில் 51 சதவிகிதம் அதாவது 4781 விண்ணப்பங்களை மகளிர், குழந்தைகள் நல அமைச்சகம் நிராகரித்துள்ளது.

ஆனால் இந்த விண்ணப்பங்கள் ஏன் நிராகரிக்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

பிஎம் கேர்ஸ் திட்டம் கீழ், கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு 10 லட்சம் ரூபாயும், தங்கும் வசதி, பள்ளி மற்றும் உயர் கல்வி படிப்பு, 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீடு மற்றும் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு 20 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது.

Source: PM CARES for Children

Trending

Exit mobile version