தமிழ்நாடு

இன்று 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவு: எந்த இணையதளத்தில் பார்க்கலாம்?

Published

on

இன்று 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கும் நிலையில் இந்த தேர்வு முடிவுகளை எந்த இணையதளத்தில் பார்க்கலாம் என்பது குறித்த தகவலை தற்போது பார்ப்போம்.

12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த தேர்வில் மதிப்பெண் திருப்தி இல்லாதவர்கள் மற்றும் தனி தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வின் முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும், மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்ய பதிவு எண் மற்றும் பிறந்த நாளைக் குறிப்பிட்டு டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிளஸ் 2 தேர்வுக்கு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளது என்றும், அவர்களும், மேற்கண்ட இணையதளத்தில் தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் செப்டம்பர் 15 மற்றும் 16 தேதிகளில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என்றும், விடைத்தாள் நகலுக்கு ஒரு பாடத்துக்கு 275 ரூபாய் கட்டணம் என்றும் மறுகூட்டலுக்கு 205 ரூபாய் என்றும் உயிரியல் பாடத்தில் மட்டும் 305 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version