தமிழ்நாடு

ஜூலை 19ல் பிளஸ் 2 முடிவுகள்: தமிழக அரசு

Published

on

தமிழகத்தில் இந்த ஆண்டு பிளஸ் டூ தேர்வு ரத்து என அறிவிக்கப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் கல்லூரியில் சேருவதற்கு வசதியாக பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடும் பணி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல் விரைவில் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் சற்று முன் தமிழக அரசு தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை 19ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

இதுகுறித்து அரசு தேர்வுகள் துறை இயக்குனர் மேலும் கூறியபோது தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவை நான்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் மாணவர்கள் தேர்வு முடிவுகளை அந்த இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்றும், அதுமட்டுமில்லாமல் 21ஆம் தேதி காலை 11 மணி முதல் இணையதளத்திலிருந்து மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண்களையும் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

மாணவர்கள் தங்களுடைய பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்ய தங்களுக்கான மதிப்பெண் பட்டியல் தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் குறித்து தெரிந்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ள இணையதளங்கள் இதோ:

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dg2.tn.nic.in
www.dge.tn.gov.in

Trending

Exit mobile version