தமிழ்நாடு

இன்னும் சில மணி நேரத்தில் பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டது என்றும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன் அறிவித்தார் என்பதும் தெரிந்ததே.

இதனை அடுத்து பிளஸ் டூ மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்காக மதிப்பெண்கள் கணக்கிடும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த குழு மதிப்பெண்களை கடந்த சில நாட்களாக கணக்கிட்டு வந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 50%, பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 20%, மற்றும் செய்முறை தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் இருந்து 30 சதவீதம் என மதிப்பெண்கள் கணக்கிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து மதிப்பெண் கணக்கிடும் பணிகள் தற்போது முடிவடைந்ததை அடுத்து இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்கள் பட்டியல் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை 10.30 மணிக்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பிளஸ் டூ தேர்வு முடிவுகளையும் மதிப்பெண்களையும் வெளியிடுகிறார். இதனை அடுத்து 11 மணிக்கு கீழ்கண்ட இணைய தளங்களில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண் மற்றும் மொபைல் எண்களை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண்களை www.tnresults.nic.in,
www.dge1.tn.nic.in, www.dg2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் வரும் 22ஆம் தேதி முதல் மதிப்பெண் பட்டியலை டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்டு 1ஆம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதை அடுத்து இன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version