தமிழ்நாடு

நாளை பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்னென்ன?

Published

on

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள இந்த பொதுத்தேர்வில் மாணவர்கள் கடைபிடிக்கவேண்டிய வழிபாட்டு நெறிமுறைகள் சற்றுமுன் வெளியிடப்பட்டு உள்ளன. அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

1. காலை 8 மணிக்கு மாணவர்கள் தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும்.

2. 9.45 மணிக்கு முதல் மணி அடித்தவுடன் மாணவர்கள், தேர்வறைக்கு செல்ல வேண்டும்.

3. 9.55 மணிக்கு இரண்டாவது மணி இருமுறை அடித்தவுடன் அறை கண்காணிப்பாளர் வினாத்தாள் உறைகளை மாணவர்களிடம் காண்பித்து இரு மாணவர்களிடம் கையொப்பம் பெற்று உறைகளை பிரிப்பார்.

4. 10 மணியளவில் மூன்றாவது மணி 3 முறை அடித்தவுடன் தேர்வர்களுக்கு வினாத்தாள் வழங்கப்படும்

5. மாணவர்கள், கேள்வித்தாளை படித்து பார்ப்பதற்கு 10 நிமிடங்கள் வழங்கப்படும். அதன்பின் 10.10 மணிக்கு, 4வது மணி நான்குமுறை அடித்தவுடன் தேர்வர்களுக்கு விடைத்தாள்கள் கொடுக்கப்படும்.

6. 10.15 மணிக்கு 5வது மணி அடிக்கப்பட்டதும் மாணவர்கள் தேர்வை எழுத ஆரம்பிக்க்க வேண்டும்.

7. மூன்று மணி நேரம் கழித்து, பிற்பகல் 1.30 மணியளவில் விடைத்தாள்கள், மாணவர்களிடமிருந்து பெறப்படும்.

8. தேர்வில் விடைத்தாள்களை மாற்றி எழுதினால், ஓராண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு பரீட்சை எழுத தடை விதிக்கப்படும்

9. ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால், தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும்.

10. தேர்வு மையங்களுக்கு மாணவர்களும், தேர்வு பணியில் இருக்கும் ஆசிரியர்களும் செல்போன் கொண்டு வரக் கூடாது

11. ஒழுங்கீன செயல்களில் பள்ளி நிர்வாகங்கள் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தேர்வு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்படும்

12. மாணவர்கள் முகக்கவசம் அணிந்து தேர்வெழுத வேண்டிய அவசியமில்லை

 

seithichurul

Trending

Exit mobile version