தமிழ்நாடு

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ஒத்திவைப்பா? நாளை முக்கிய முடிவு

Published

on

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது தெரிந்ததே. இருப்பினும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மட்டும் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் மொழித்தேர்வு மட்டும் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது.

ஆனால் அதிமுக கூட்டணி கட்சியான பாமக உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் மட்டும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் மருத்துவர்களின் கோரிக்கையை அடுத்து பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட அல்லது ஒத்திவைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின் படி தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ஒத்தி வைப்பது குறித்து நாளை முக்கிய முடிவு எடுக்கப்படும் என்றும், நாளை இதுகுறித்த அறிவிப்புகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் தலைமைச் செயலாளர் நாளை இது குறித்து ஆலோசனை செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வை ரத்து செய்யப்பட்டுவிட்டது என்பதும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version