சினிமா செய்திகள்

மாரடைப்பு ஏற்பட்டு கிரேசி மோகன் மரணம்!

Published

on

பிரபல நடிகரும், வசனகத்தாவுமான கிரேசி மோகன் இன்று பிற்பகல் 2 மணியளவில் மரணம் அடைந்தார்.

இன்று காலை 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேசி மோகன் சிகிச்சை பலனின்றி காலமானார்.

66 வயதான கிரேசி மோகன் நாடகத் துறை எழுத்தாளர், நகைச்சுவை நடிகர், சினிமா வசனகத்தாவாகவும் இருந்தார்.

இன்று காலை பிரபல நடிகரும், எழுத்தாளருமான கிரிஷ் கர்னாட் காலமானதை அடுத்து கிரேசி மோகன் இறந்துள்ளது திரை மற்றும் நாடத்துறையினரை பெரும் அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது.

இரட்சகன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் இருவரும் சேர்ந்து பணியாற்றியுள்ளனர் என்பது கூடுதல் தகவல்.

seithichurul

Trending

Exit mobile version