இந்தியா

ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: என்னென்ன பொருட்களுக்கு தடை?

Published

on

ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜூலை 1ஆம் தேதி முதல் தடை மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு தடை என்ற பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில், ‘காலநிலை மாற்றத்திற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் மிகப்பெரிய அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்காக உள்ள நிலையில் 2020 வரும் ஆகஸ்ட் மாதம் மத்திய அரசால் அடையாளம் காணப்பட்ட ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை ஜூலை 1ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே ஜூலை 1 முதல் பிளாஸ்டிக் உற்பத்தி, இறக்குமதி செய்து விற்பனை மற்றும் பயன்படுத்தல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக பிளாஸ்டிக்கால் ஆன காது குடையும் குச்சி, ஐஸ் கிரீம் குச்சி போன்றவை இந்த வகையில் அடங்கும். இவை தவிர பத்திரிகைகள், சிகரெட் அட்டைகள் 100 மைக்ரோன் கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிவிசி பேனர்கள் ஆகியவை அடங்கும்.

ஜூலை 1ம் தேதிக்கு முன்னதாக அதாவது ஜூன் 30ம் தேதிக்குள் மேற்கண்ட பொருட்கள் அனைத்தையும் வணிகர்கள், சிறு கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்கில் உள்ள விற்பனைக் கூடங்கள் என அனைத்து வணிகர்களும் அதன் இருப்பை ஜீரோ என்ற அளவிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

ஜூலை 30ஆம் தேதிக்கு பிறகு மேற்கொண்ட பொருட்களை வைத்து இருந்தாலோ, விநியோகம் செய்தாலோ தடை செய்யபப்ட்ட பொருட்கள் கண்டெடுத்த இடம் சீல் வைக்கப்படும் எனவும், உரிய அபராதம் விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version