உலகம்

குழந்தை பெற்றால் ரூ.70 லட்சம் பரிசு.. எங்கு எப்படி?

Published

on

தென் கொரியாவின் சவுத் ஜியோன்சாங்க் மாகானதில் திருமணமான புதிய தம்பதிகள் குழந்தை பெற்றால், ரூ.70 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாகத் தென் கொரியாவின் சவுத் ஜியோன்சாங்க் மாகானதில் மக்கள் தொகை தொடர்ந்து குறைந்து வருகிறது. இறப்பு விகிதத்தை விட பிறப்பு விகிதம் குறைவாக உள்ளதால் கொரிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.அதற்குப் புதிதாக திருமணமாகும் ஜோடிகள் குழந்தை பெற்றுக்கொள்வது பற்றித் திட்டமிடாமல் இருப்பதும், தவிர்ப்பதுமே காரணம் என்று கண்டறியப்பட்டது.

எனவே புதிதாகத் திருமணமாகும் ஜோடிகள் ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் தாங்கள் வாங்கும் கடனுக்கு வட்டி செலுத்தத் தேவையில்லை.

இரண்டாவதாகக் குழந்தை பெற்றுக்கொண்டால், கடன் தொகையில் 30 சதவீதம் வரை செலுத்தத் தேவையில்லை.

மூன்றாவதாக ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் அந்த திருமண ஜோடி வாங்கிய கடன்கள் அனைத்து ரத்து செய்யப்படும். இப்படி 70 லட்சம் ரூபாய் வரை கொரிய அரசு அளிக்கும் சலுகைகளைப் பெற முடியும்.

2020-ம் ஆண்டு தென் கொரியாவில் 3,07,764 நபர்கள் இறந்துள்ளனர். ஆனால் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை வெறும் 2,75,815 மட்டுமே.

Trending

Exit mobile version