சினிமா செய்திகள்

மிரட்ட வருகிறது பீட்சா 3… போஸ்டர் வெளியீடு..!

Published

on

கடந்த 2012-ம் ஆண்டு வெளியாக மாற்று சினிமாவாக மாபெரும் ஹிட் அடித்தத் திரைப்படம் பீட்சா.

பீட்சா மூலம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார். மாபெரும் ஹிட் அடித்த பீட்சா திரைப்படத்துக்கான வரவேற்பின் அடிப்படையில் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. அடுத்த ஆண்டே 2013-ல் பீட்சா 2 வெளியாக அதற்குப் பெரிய வரவேற்பு எதுவும் இல்லை. பீட்சா 2 படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடித்திருப்பார்.

இந்த சூழலில் தற்போது பீட்சா 3 படத்துக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பீட்சா 3 படத்தையும் தயாரிப்பாளர் சிவி குமார் தயாரித்து வழங்க உள்ளார். பீட்சா 2 தி வில்லா எனப் பெயரிட்டது போல் தற்போது பீட்சா 3-க்கு தி மம்மி என டேக் வெளியிட்டுள்ளனர். பீட்சா 3 படத்தை அறிமுக இயக்குநர் மோகன் அரவிந்த் இயக்க உள்ளார். இந்தப் படத்தில் ஜீரோ, இதற்குத் தானே ஆசைப்பட்டாய் ஆகிய படங்களில் நடித்த அஸ்வின் நாயகனாக நடிக்கிறார்.

Trending

Exit mobile version