சினிமா செய்திகள்

சூர்யாவின் அடுத்த படத்தில் மிஸ்கின் நாயகி!

Published

on

சூர்யாவின் அடுத்த படத்தில் பிசாசு பட நாயகி பிரயகா மர்டின் நடிக்க உள்ளார்.

கொரோனா நோய்த்தொற்று பரவலால் வாழ்வாதாரம் இழந்த திரைத்துறைக்கு நிதியளிக்கும் வகையில், நவரசா என்ற பெயரில் வெப்சீரிஸ் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் 9 விதமான படங்கள் அடங்கும். அதில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த நிலையில், சூர்யாவுக்கு ஜோடியாக மலையாள நடிகை பிரயகா மர்டின் என்பவர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. இவர் ஏற்கெனவே மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற பிசாசு என்ற படத்தில் நடித்தவர் ஆவார். தற்போது சூர்யாவுடன் நடிக்கிறார்.

இந்த திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா நிறைய தலைமுடிகளோடு வித்தியாசமான தோற்றத்தை கொண்டு வர முயற்சி செய்து வருகிறார். நவரசா ஆந்தாலஜி படம் நெட்ஃபிலிக்ஸில் வெளியாக உள்ளது. இயக்குநர் மணிரத்னம், ஜெயேந்திரா இருவரும் இணைந்து இதனை தயாரிக்கின்றனர். மொத்தமுள்ள 9 படத்தையும் கேவி ஆனந்த், கார்த்திக் சுப்புராஜ் என பல இயக்குநர்கள் தனித்தனியாக இயக்குகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version