தமிழ்நாடு

தமிழக மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள்: இலங்கையை சேர்ந்தவர்களா?

Published

on

கடந்த பல ஆண்டுகளாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன என்பதும் இதனால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள படகுகளை தமிழக மீனவர்கள் கடந்த சில ஆண்டுகளில் இழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு பக்கம் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்கள் நேற்று திடீரென கடற் கொள்ளையர்களால் தாக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகை மாவட்ட மீனவர்கள் நேற்று கோடிக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடற்கொள்ளைகள் சுற்றிவளைத்து மீனவர்களின் படகுகளை தாக்கி அவர்களுடைய வலை மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை எடுத்துச் சென்றதாகவும் கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த மீனவர்கள் காவல் துறையிடம் புகார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடற் கொள்ளையர்களால் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முயற்சி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version