சினிமா செய்திகள்

பில்டப் சிம்பு இஸ் பேக்… வந்தா ராஜாவாதான் வருவேன் விமர்சனம்!

Published

on

பேரன்பு, சர்வம் தாளமயம், வந்தா ராஜாவாதான் வருவேன் என மூன்று பெரிய படங்கள் இன்று ரிலீசாகியுள்ளன. மேலும், சகா எனும் சிறு பட்ஜெட் படமும் இன்று ரிலீசாகியுள்ளது.

பேரன்பு, சர்வம் தாளமயம் படங்களின் விமர்சனத்தை முன்னதாக பார்த்துவிட்டோம்.. அண்டாவில் பால் கேட்ட சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..

இது மறுபடியும் ஒரு சுந்தர்.சி எண்டர்டெயின்மெண்ட் படம் தான். சிம்புவை விட சுந்தர்.சி தான் பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார்.

தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் 2013ல் வெளியான அந்தாரண்டிகி தாரேதி படத்தினை தமிழிலில் ரீமேக் செய்துள்ளார் சுந்தர்.சி.

படத்தின் கதை என்னவென்றால், தனது பேச்சை மீறி திருமணம் செய்து கொள்ளும் மகள் ரம்யா கிருஷ்ணனை நாசர் ஒதுக்கி வைக்கிறார். வயதான காலத்தில், தனது பேரன் சிம்புவிடம் மீண்டும் நீதான் எனது மகளை குடும்பத்துடன் சேர்த்து வைக்க வேண்டும் என்ற அன்பு கட்டளையிட, சிம்பு, தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற செய்யும் மாஸ் சேட்டைகள் தான் இந்த படம்.

தெலுங்கு படம் பார்த்துவிட்டவர்களுக்கு நிச்சயம் இந்த படம் பெரிதாக பிடிக்குமா என்பது கேள்விக் குறிதான்.

படத்தின் மற்றொரு நாயகனாக யோகிபாபு அசத்துகிறார். அவர் சிம்புவுக்கு எதிராக கொடுக்கும் கவுண்டர்களுக்கு தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கின்றது. ஆனால், சிம்புவின் டான்ஸ் மற்றும் சண்டைக் காட்சிகளில் அவரது கூடுதல் எடையே சிம்புவுக்கு வில்லனாக வந்து நின்று, ரசிக்க வைக்க முடியாமல், சிம்புவா இப்படி நடனமாட கஷ்டப்படுகிறார் என்ற அனுதாபத்தையும் எரிச்சலையும் ஒருங்கே ஏற்படுத்துகின்றன.

மேகா ஆகாஷ் ஒரு வழியாக நான் ஹீரோயினாக நடித்த படம் ரிலீசாகி விட்டது என்று பெருமை பட்டு கொள்வார். ஆனால், நடிப்பில், இவர் ஒரு செட் புராபர்ட்டி போல் தான் செயல்பட்டுள்ளார்.

எந்த சீனிலும் ரியாக்‌ஷன் இல்லை. பாடல்களுக்கு ஆடும் போது கேத்தரின் தெரசாவுக்கு இருக்கும் எனர்ஜியில் பாதி கூட இல்லை.

எப்படி தான் கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் நடித்திருப்பார் என்ற ஆவலும் சந்தேகமும் ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

தெலுங்கில் சமந்தா இந்த வேடத்தில் நடிப்பில் மிரட்டியிருந்தார். தமிழில் ஹீரோயின் போர்ஷன் அவ்வளவு சிறப்பாக அமையாதது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் தான்.

வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் வந்தா ஜால்ராவுடன் தான் வருவேன் என டைட்டிலை மாற்றி வைத்துக் கொள்ளும் அளவுக்கு ரோபோ ஷங்கர் சிம்புவுக்கு துதி பாடும் ரோலில் நடித்துள்ளார்.

சிம்பு மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளும், அதற்கு அவர், எல்லாம் மக்களுக்கு தெரியும், என அடிக்கடி ஸ்க்ரீனை காட்டுவதும், சிம்பு ரசிகர்களுக்கே சளிப்பை தட்டுகிறது என்பது தான் உண்மை.

இந்த வாரம் ரிலீசான பேரன்பு படம் கிளாசிக் எமோஷனையும், சர்வம் தாளமயம் மீயூசிக்கல் எமோஷனையும் தருகிறது என்றால், ஜனரஞ்சக மற்றும் காமெடி ஆடியன்ஸுகளுக்கு ஒரு 60சதவீத மகிழ்ச்சியை தரும் மாஸ் கமர்ஷியல் எண்டர்டெயினராக வந்தா ராஜாவாதான் வருவேன் படம் இருக்கும்.

சுந்தர்.சி படத்துக்கு உரிய பல லாஜிக் மீறல்கள் இந்த படத்திலும் இருக்கு, பிரபுவை சுடும் ஒரு காட்சியில், அவர் அலறாமல், ரம்யா கிருஷ்ணன் வசனம் பேச வைத்து விட்டு, வேடிக்கை பார்க்கும் காட்சி மற்றும், மாடியிலிருந்து விழும் கேத்ரின் தெரசா, காருக்குள் நேராக விழும் காட்சியெல்லாம் ரொம்ப ஓவர்.

மொத்தத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் சிம்பு ரசிகர்களுக்காக மட்டுமே..

சினி ரேட்டிங்: 2.5/5.

seithichurul

Trending

Exit mobile version