இந்தியா

திருமண பரிசாக 300 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பிரபல நிறுவனத்தின் சி.இ.ஓ!

Published

on

பிரபல நிறுவனத்தின் சிஇஓ சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்த நிலையில் தனது திருமண பரிசாக 300 ஜோடிகளுக்கு தனது செலவில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார்.

பிரபல கல்வி நிறுவனமான பிசிக்ஸ் வாலா என்ற நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு யூடியூப் சேனலாக அறிமுகமானது என்பதும் அதில் நீட் மற்றும் ஜேஈஈ விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு யூடியூபில் இருந்து பிசிக்ஸ் வாலா என்ற கல்வி நிறுவனமாக மாறியது. இந்நிறுவனத்தின் நிறுவனத்தின் சி.இ.ஓ அலக் பாண்டே இயற்பியல், கணிதம், உயிரியல், பொருளாதாரப் போன்ற பாடங்களுக்கு பயிற்சி அளித்தார்.

இந்த தளம் தற்போது மிகப்பெரிய அளவில் மாணவர்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறது என்பதும் இதனால் இதன் அலக் பாண்டேவுக்கு ஏராளமான வருமானம் குளிரது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது நீண்ட நாள் காதலுயான ஷிவானி துபே என்பவரை சமீபத்தில் அலக் பாண்டே திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் தனது திருமண பரிசாக 300 ஜோடிகளுக்கு தனது சொந்த செலவில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்காக அவர் உத்தர பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்தித்து அனுமதி பெற்றதாகவும் உத்தரபிரதேசம் மாநில அரசு நடத்தும் சமுஹிக் விழா’ என்ற திட்டத்தின் கீழ் 300 ஜோடிகளுக்கான திருமண செலவை முழுவதும் தான் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. உத்தர பிரதேச மாநில அரசு சமுஹிக் விழா’ திருமணத்தை அவ்வப்போது நடத்தி வரும் என்பதும் ஒரு ஜோடிக்கு 55,000 செலவழித்து திருமணம் செய்து வைப்பதோடு, 35 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருட்களையும் உத்தர பிரதேச மாநில அரசு தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள சமுஹிக் விழா’ திருமணத்தில் 300 ஜோடிகளுக்கான திருமண செலவையும் அலெக் பாண்டே ஏற்றுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதுமட்டும் இன்றி திருமணமான ஜோடிகள் மீண்டும் கல்வியை தொடர விரும்பினால் அதற்கு தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version