உலகம்

புத்தாண்டில் பவர்கட்.. 300 விமானங்கள் ரத்து, 56000 பயணிகள் பாதிப்பு.. எங்கே தெரியுமா?

Published

on

உலகம் முழுவதும் நேற்று புத்தாண்டு மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் புத்தாண்டை கொண்டாடி விட்டு நாடு திரும்ப முடிவு செய்த பயணிகள் பலர் மணிலா விமான நிலையத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலா விமான நிலையத்தில் நேற்று திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக சுமார் 300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் தாமதமாக சென்றதாகவும் இதனால் 50 ஆயிரம் பயணிகள் தவித்தனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தாண்டு கொண்டாடுவதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்தார்கள் என்றும் அவர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு நாடு திரும்ப முயற்சி செய்தபோது விமான நிலையத்தில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக பல மணி நேரம் கழித்து தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திடீரென ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக மணிலா வழியாக செல்லக்கூடிய விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கப்படவில்லை என்றும் இதனால் வெவ்வேறு நாடுகளுக்கு அந்த விமானங்கள் திருப்பிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சிஎனென் அறிக்கையின்படி மொத்தம் 282 விமானங்கள் தாமதமாகவும் ஒரு சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் சில விமானங்கள் பிராந்திய விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமான பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோரிய பிலிப்பைன்ஸ் விமான போக்குவரத்து செயலர் கடுமையான மின்வெட்டு காரணமாக இந்த இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.இருப்பினும் விமான நிலையத்தில் காத்திருந்த அனைத்து பயணிகளுக்கும் தங்குமிடம், உணவு உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு பிறகு ஓரளவு விமானங்கள் செயல்பட தொடங்கியதாகவும் அதன்பின் மணிலா விமான நிலையம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version