இந்தியா

பிஜி நீட் தேர்வு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்படும் இருக்கும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி நீட்தேர்வு மேலும் நான்கு மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பிஜி நீட் தேர்வு ஏப்ரல் 18ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் ஏற்கனவே இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் மே மாதம் இந்த தேர்வு நடக்கும் என செய்திகள் வெளியான நிலையில் தற்போது மேலும் நான்கு மாதங்களுக்கு பிஜி நீட்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நான்கு மாதங்களுக்கு இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறியிருப்பதால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இந்த தேர்வு நடைபெற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு கொரோனா வைரஸ் நிலைமையை பொறுத்து நீட் தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. மேலும் தேர்வு நடத்த திட்டமிட்டால் மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version