இந்தியா

நீட் தேர்வுக்கான கட் ஆஃப் மதிப்பெண் குறைப்பு: தேசிய தேர்வு வாரியம் அறிவிப்பு

Published

on

முதுநிலை நீட் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட உள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வு கடந்த சில ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்து வருகிறது என்பதும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களைத் தவிர அனைத்து மாநிலங்களிலும் நீட் தேர்வுகு எந்தவித எதிர்ப்பும் இல்லை என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் முதுநிலை நீட் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் குறைக்கப்பட உள்ளதாக தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது அனைத்து பிரிவினருக்கான கட் ஆப் மதிப்பெண் 15% குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

அதாவது பொதுப்பிரிவினருக்கு 35% எனவும், பொது மாற்றுத்திறனாளிகளுக்கு 30% எனவும், ஒபிசி, எஸ்.இ. எஸ்.டி பிரிவினருக்கு 25% எனவும் கட் ஆப் குறைக்கப்பட்டுள்ளது என தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

குறைக்கப்பட்ட கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் புதிய தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அதன் பட்டியலை அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தேசிய தேர்வு வாரியத்திற்கு மத்திய பொது சுகாதார சேவை இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version