இந்தியா

முதுநிலை மருத்துவ நீட் தேர்வு தேதி அறிவிப்பு!

Published

on

மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் சற்றுமுன் முதுநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 12-ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து சற்றுமுன்னர் மருத்துவ முதுநிலைப் படிப்பிற்கான நீட் தேர்வு செப்டம்பர் 11ஆம் தேதி அதாவது ஒரு நாள் முன்பே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை ஆகிய இரண்டு படிப்புகளுக்கும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் மாணவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளி தேர்வுகள் போலவே நுழைவுத்தேர்வுகளும் ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் இருந்த நிலையில் தற்போது நுழைவுத்தேர்வு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜே.ஈ.ஈ நுழைவுத்தேர்வு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த தேர்வு குறித்து மத்திய அமைச்சர் மனுசுக் மாண்டவியா அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

seithichurul

Trending

Exit mobile version