சினிமா

பேட்ட படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு!

Published

on

ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சியின் புகைப்படத்தை தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

முன்னதாக, ட்விட்டர் ரசிகர்களிடம், ரஜினியின் நிழல் புகைப்படத்தை பதிவிட்டு, இதனை ஆயிரம் ரீட்வீட் செய்தால், பேட்ட படத்தின் எக்ஸ்க்ளூசிவ் புகைப்படம் வெளியிடப்படும் என்ற போட்டியை முன்வைத்தது.

இதனை தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் ரீட்வீட் பட்டனை துவம்சம் செய்தனர். இதன் விளைவாக அறிவிப்பு வெளியிட்ட சில நிமிடங்களிலேயே ரஜினியின் புதிய போஸ்டரை சன் பிக்சர்ஸ் வெளியிட்டது.

அதில், கடா மீசையுடன் வெள்ளை சட்டை வேட்டியுடன் இளம் ரஜினி கையெடுத்து கோவிலில் கும்பிடுவது போன்ற புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version