சினிமா

பேட்ட படத்தை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்போவது யார் தெரியுமா?

Published

on

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் சர்வதேச வெளியீட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேஷன் எனும் பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

வருகிற பொங்கலுக்கு விஸ்வாசம் படத்துடன் போட்டியாக வரும் ரஜினியின் பேட்ட படத்தில் விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், சசிகுமார், பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் டிரெண்டிங்கில் சாதனை படைத்த நிலையில், இதன் சர்வதேச வெளியீட்டு உரிமையை மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்பரேஷன் நிறுவனம் பெருந்தொகைக்கு வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version