சினிமா செய்திகள்

பேட்ட விமர்சனம்: ஒன்லி ரஜினிஸம்!

Published

on

வாடன் என்றாலே அடிப்போம் என்ற வடிவேல் காமெடிதான் நினைவுக்கு வரும், அந்த வாடன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரஜினி, இனி வாடனும் அடிப்போம் என மிரட்டியுள்ளார்.

ரஜினி விமர்சகர் படம் எடுத்தால் மட்டுமே ரஜினிஸம் இல்லாமல் நல்ல கதை கிடைக்கும் போல, ரஜினியை விரும்பும் ரஜினியின் ரசிகர்கள் படம் எடுக்கும் வரை ரஜினிஸம் மட்டுமே திரையில் பார்க்க முடியும் என்பதற்கு பேட்ட படமும் பெரிய உதாரணமாக மாறியுள்ளது.

படத்தின் கதை:

அதே பழிவாங்கும் ஃபார்முலா கதை தான். இன்று வெளியான விஸ்வாசம் படம் மற்றும் பேட்ட ஆகிய இரு படங்களுக்கு பெரிதாக வேறுபாடு கிடையாது. விஸ்வாசம் அஜித் ரசிகர்களுக்கான படம் என்றால், பேட்ட படம் ரஜினி ரசிகர்களுக்கான படம் அவ்வளவுதான். இரண்டிலும் எண்ணற்ற லாஜிக் ஓட்டைகள் பழைய கதை என பல ஒற்றுமைகள் உள்ளன.

சரி பேட்ட கதையை பற்றி பார்ப்போம்…

வாண்டடாக டார்ஜிலிங்கில் உள்ள ஒரு கல்லூரிக்கு வாடனாக சேருகிறார் ரஜினி. கல்லூரியில் ரகளை செய்யும் பாபி சிம்ஹா மற்றும் அவரது கூட்டத்தின் கொட்டத்தை அடக்குகிறார். பாபி சிம்ஹாவின் தந்தையிடம் சென்று தெனாவட்டாக அந்த விஷயத்தை தீர்த்து வைக்கிறார். ரஜினியை அடிக்க பாபி சிம்ஹா ஆட்களை இறக்குகிறார். ஆனால், வந்து இறங்குவதோ வேற கேங்.

அந்த கேங் அந்த கல்லூரிக்கு ஏன் வந்தது. ரஜினி எதற்காக வாடனாக சேர்ந்தார். நவாசுதின் சித்திக்கும் அவரது மகனுமான விஜய்சேதுபதிக்கும் ரஜினிக்கு என்ன விதமான பகை.

ரஜினி மிசா கைதியாக எப்படி மாறி ஜெயிலுக்கு போகிறார். திரிஷா என்ன ஆனார். ரஜினிக்கும் சிம்ரனுக்கும் இடையே இளமை திரும்பும் காட்சிகள், சசிகுமாரின் நட்பு கதாபாத்திரம் என பல விஷயங்கள் படத்தில் இருந்தாலும், காட்சிக்கு காட்சி ரஜினி ரஜினி ரஜினி மட்டுமே நம் கண்களுக்கு தெரியும் வண்ணம் படத்தை உருவாக்கியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

படத்தின் கிளைமேக்ஸில் விஜய்சேதுபதி மூலமாக வரும் ஒரு ட்விஸ்ட். கார்த்திக் சுப்பராஜின் கோரிக்கையை ஏற்று ட்விஸ்ட் என்ன என்பதை சொல்லவில்லை. இப்படி படம் ரசிகர்களுக்கு ரஜினிஃபைடாகவே உள்ளது.

கார்த்திக் சுப்பராஜ் ஒருபுறம் பழைய காளியை மீண்டும் கொண்டு வந்து தான் ஒரு ரஜினி வெறியன் என நிரூபித்தால், இன்னொரு புறம் அனிருத், ரஜினியின் ஒவ்வொரு அசைவுக்கும் ஒவ்வொரு பிஜிஎம் போட்டும், பாடல்களில் பழைய ரஜினியின் நக்கல், கிண்டல், நையாண்டி நடனம் மாஸ் பன்ச் என கலந்து கட்டி மரண மாஸ் காட்டியுள்ளார்.

விமர்சகர்கள் பார்க்க இரண்டு படங்களும் போதிய கதை தன்மை கொண்டு இராவிடினும் ரசிகர்கள் மற்றும் பொது ஆடியன்ஸ் பார்க்க தேவையான அத்தனை விஷயங்களும் இரண்டு படங்களிலுமே உள்ளது தயாரிப்பாளர்கள் மற்றும் 2019ம் ஆண்டின் வசூல் ஆரம்பமகாவே அமைந்துள்ளது தமிழ் சினிமாத்துறைக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான்.

கடந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக வெளியான தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி போன்ற படங்கள் ரசிகர்களை வைத்தது செய்தது போல அல்லாமல், இந்த பொங்கல் திருவிழா தல மற்றும் தலைவர் பொங்கலாகவே இன்று முதல் மாறியுள்ளது.

தியேட்டர்களில் ரசிகர்கள் கடலென திறண்டு இரு படங்களையும் பாக்ஸ் ஆபிசில் மெகா ஹிட்டாக கொண்டு வந்தே தீருவோம் என போட்டி போட்டு வருகின்றனர்.

நிச்சயம் பேட்ட படம் காலா, கபாலி, படங்களை காட்டிலும் பக்கா கமர்ஷியல் மற்றும் ஆக்‌ஷன் அட்ராசிட்டி தான்.

அதுவும் தலைவர் அந்த துப்பாக்கி எடுத்து சுடும் அழகு இருக்கிறதே வேற லெவல் எனர்ஜியை ரசிகர்களுக்கு அப்படியே கடத்துகிறது.

பேட்ட சினி ரேட்டிங்: 3.25/5.

seithichurul

Trending

Exit mobile version