இந்தியா

பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் வர அவங்க ஓகே சொல்லனும்: நிர்மலா சீதாராமன்

Published

on

பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்தால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மாநில அரசுகள் சம்மதித்தால் பெட்ரோலிய பொருட்கள் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

#image_title

பெட்ரோலிய பொருட்கள் போன்ற சில பொருட்கள் இன்னும் ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரப்படவில்லை. உற்பத்தி வரி, உபரி வரி உள்ளிட்ட வரிகள்தான் இவற்றுக்கு விதிக்கப்படுகின்றன. எனவே அவற்றின் விலையை குறைக்க ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என பலதரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, பெட்ரோலிய பொருட்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், மாநில அரசுகள் சம்மதம் தெரிவித்தால், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர முடியும். மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

பல நிதி ஆதாரங்களை மத்திய அரசு தன் வசம் வைத்துள்ள நிலையில் மாநில அரசின் நிதி ஆதாரங்களில் மிக முக்கியமான ஒன்றாக உள்ளவை பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மீதான வரிவிதிப்பாகும். இதனை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவந்தால் மாநில அரசிற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மாநில அரசு இதற்கு சம்மதம் தெரிவிப்பது மிகவும் கடினமாகும்.

Trending

Exit mobile version