தமிழ்நாடு

பெட்ரோல் விலை மீதான வரி குறைப்பு: பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் தகவல்

Published

on

கடந்த சில மாதங்களாக பெட்ரோல் விலை தினந்தோறும் உயர்ந்து கொண்டே வந்தது என்பதும் பெட்ரோல் விலை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ரூபாய் 100ஐ தாண்டி விட்டது என்பதும் தெரிந்ததே

தற்போது 26 நாட்களாக பெட்ரோல் விலை உயர்வு இல்லை என்றாலும் ஏற்கனவே உயர்ந்ததால் பெட்ரோல் விலை தற்போது லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 102.49 என்றும் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 84.39 என்றும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வரிவிதிப்பை குறைக்க வேண்டும் என்றும் கச்சா எண்ணெய் குறைவதற்கு ஈடாக பெட்ரோல் விலையையும் குறைக்க வேண்டும் என்றும் பல மாதங்களாக பொதுமக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை விடுத்து வருகிறது

இந்த நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் மீதான வரி குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு ரூபாய் மூன்று குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெட்ரோல் மீதான வரி, 2014-ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூ.10.39 ஆக இருந்து நிலையில் தற்போது ரூ.32.90 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும், டீசல் மீதான வரி, 2014-ஆம் ஆண்டு லிட்டருக்கு ரூ.3.57 ஆக இருந்து நிலையில் தற்போது ரூ.31.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version