இந்தியா

பெட்ரோல் ரூ.25 குறைப்பு: இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த முதல்வரின் அறிவிப்பு!

Published

on

கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதும் சென்னையில் தற்போது பெட்ரோல் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென பீகார் மாநில முதல்வர் பெட்ரோல் விலை ரூபாய் லிட்டருக்கு ரூ.25 குறைத்துள்ளது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை குறைத்து உத்தரவு பிறப்பித்தது. இதன்படி ஒரு லிட்டர் பெட்ரோல் மீது ஐந்து ரூபாயும் ஒரு லிட்டர் டீசல் மீது 10 ரூபாயும் குறைக்கப்பட்டது என்பதும், மத்திய அரசை பின்பற்றி ஒரு சில மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால்தான் 110க்கு மேல் இருந்த பெட்ரோல் விலை 100 ரூபாய் என இறங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அவர்கள் திடீரென பெட்ரோல் விலை ரூபாய் 25 குறைக்க்கப்படுவதாக அறிவித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் இந்த விலை குறைப்பு இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் 10 லிட்டர் வரை பெட்ரோல் போடும் போது மட்டுமே இந்த சலுகை கிடைக்கும் என்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு விலை குறைப்பு பொருந்தாது என்றும் அறிவித்துள்ளார்.

இந்த விலை குறைப்பு குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் அறிவித்துள்ளார். பெரும்பாலான இரு சக்கர வாகன ஓட்டிகள் ஏழை எளியவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினராக இருப்பதால் அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் இந்த விலை குறைப்பு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் பெட்ரோலுக்கான விலையை பொதுமக்கள் பெட்ரோல் நிலையங்களில் செலுத்தவேண்டும் என்றும் அவர்களுக்கு ஒரு லிட்டருக்கு ரூபாய் 25 குறைக்கப்பட்டு அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த ஜார்கண்ட் முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து பிற மாநில முதல்வர்களும் இதனை பின்பற்றுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

seithichurul

Trending

Exit mobile version