தமிழ்நாடு

பட்ஜெட் எதிரொலி: இன்று நள்ளிரவு முதல் குறைகிறது பெட்ரோல் விலை!

Published

on

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்ததன் காரணமாக பெட்ரோல் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்கள் தாக்கல் செய்த நிலையில் அதில் பல முக்கிய அம்சங்கள் இருந்ததை பார்த்து வந்தோம். அதில் ஒன்று பெட்ரோல் மீதான தமிழக அரசின் வரி ரூபாய் மூன்று குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பெட்ரோல் விலை 100க்கும் குறைவாக இன்று நள்ளிரவு முதல் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. முதலமைச்சர் அவர்களின் உத்தரவுபடி பட்ஜெட்டில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பல வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது அக்கட்சியின் மீதான நம்பிக்கையை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மத்திய அரசும் மூன்று அல்லது நான்கு ரூபாய் பெட்ரோல் மீதான வரியை குறைத்தால் பெட்ரோல் விலை ரூ.90 என கிட்டத்தட்ட குறைந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசை பின்பற்றி மத்திய அரசும் பெட்ரோல் மீதான வரியை குறைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version