தமிழ்நாடு

சென்னையில் செஞ்சுரி அடித்தது பெட்ரோல் விலை: பொதுமக்கள் அதிர்ச்சி.. இன்றைய விலை என்ன?

Published

on

சென்னை உள்பட இந்தியா முழுவதும் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதை பார்த்து வருகிறோம். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதாக மத்திய மாநில அரசுகள் விளக்கம் கொடுத்தாலும் பெட்ரோல் டீசலுக்கான வரிகள் மிக அதிகம் என்றும் அதனை குறைக்க வேண்டும் என்றும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் புதிய ஆட்சி வந்த போதிலும் பெட்ரோல் டீசல் மீதான வரியை குறைக்க வில்லை என்பதும், மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க எண்ணத்திலேயே இல்லை என்பதும் தெரியவந்து உள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியுள்ள நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை இன்று மட்டும் 33 காசுகள் உயர்ந்ததை அடுத்து 100.13 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. சென்னையில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை என்பதால் ஒரு லிட்டர் விலை ரூ.93.72 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version