தமிழ்நாடு

சென்னையில் முதல்முறையாக ரூ.90ஐ தாண்டிய பெட்ரோல் விலை!

Published

on

கடந்த சில நாட்களாக பெட்ரோல் விலை மற்றும் டீசல் விலை அதிகரித்து கொண்டே வரும் நிலையில் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். நேற்று நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்பிக்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார்கள் என்பதும் அதற்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் பதிலளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரிகளை குறைக்க வேண்டும் என்றும் ஒருபக்கம் குரல் எழுந்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் தினந்தோறும் பெட்ரோல் விலை ஏறுவது தவிர்க்க முடியாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதல் முறையாக 90 ரூபாயை தாண்டி பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ.90.18-க்கு விற்பனையாகி வருகிறது என்பதும், டீசல் விலை லிட்டர் 83.18 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்று மட்டும் பெட்ரோல் விலை 22 காசுகள் உயர்ந்து உள்ளது என்பதும் டீசலின் விலை 28 காசுகள் உயர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூரில் பெட்ரோல் விலை லிட்டர் 91.90 ரூபாய்க்கும், கடலூரில் டீசல் விலை 84.83 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. இதே ரீதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றால் ரூ.100ஐ பெட்ரோல், டீசல் விலை தொடவும் வாய்ப்பு உள்ளது

seithichurul

Trending

Exit mobile version