தமிழ்நாடு

இன்றும் உயர்ந்தது பெட்ரோல் விலை: ரூ.102ஐ நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதையும் பெட்ரோல் விலை கடந்த வாரம் லிட்டர் 100 ரூபாயை தாண்டியது என்பதையும் பார்த்தோம்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசியமான பொருள்களின் விலையும் உயர்ந்து வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை இன்றும் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததை அடுத்து இந்த விலையேற்றம் என்று கூறப்படுகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 காசுகள் உயர்ந்ததை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 101.92 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது கிட்டத்தட்ட 102 ரூபாய்தான் என்பதும் தெரிந்ததே. அதே நேரத்தில் சென்னையில் டீசல் விலை இன்று 15 காசுகள் குறைந்து உள்ளது. இதனை அடுத்து டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.94.24 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதே ரீதியில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றால் இன்னும் ஒரு சில வாரங்களில் பெட்ரோல் விலை ரூ.110ஐ தொட்டுவிடும் என்று அஞ்சப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version