இந்தியா
பெட்ரோல் விலை 4 நாளில் 3 முறை உயர்வு.. இன்றைய விலை நிலவரம் என்ன?
பெட்ரோல், டீசல் விலை வெள்ளிக்கிழமை ஒரு நாள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் லிட்டருக்கு 84 பைசா உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று பெட்ரோல் விலை 76உயர்ந்து 103.67 பைசா எனவும், டீசல் விலை 76 பைசா உயர்ந்து 93.70 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மும்பையில் பெட்ரோல் விலை 84 பைசா உயர்ந்து 112.51 ரூபாய் எனவும், டீசல் 96.70 ரூபாயாகவும் விற்பனையாகிறது. டெல்லியில் 80 பைசா உயர்ந்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு 87.81 ரூபாய் எனவும் டீசல் 89.07 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடந்த 4 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது முறையாக உயர்ந்துள்ளது. முன்னதாக செவ்வாய்க்கிழமை மற்றும் புதன்கிழமை பெட்ரோல் டீசல் விலை 80 பைசா விலை உயர்ந்து இருந்தது.
சிஎன்ஜி வாகன எரிவாயு விலையும் 1 ரூபாய் உயர்ந்துள்ளது. டெல்லியில் கிலோ ஒன்றுக்கு 59.01 ரூபாயாக சிஎன்ஜி விற்பனையாகி வருகிறது.
சர்வதேசச் சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் ஒன்றுக்கு 119.03 டாலராகவும், WTI கச்சா எண்ணெய் பேரல் 112.34 டாலர் எனவும் விற்பனையாகி வருகிறது.