இந்தியா

இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தாண்டியது – அதிர்ச்சியில் மக்கள்

Published

on

நாட்டில் பெட்ரோல் விலை இன்று 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. ராஜஸ்தான் மாநில ஶ்ரீ கங்காநகரில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 100.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல அங்கு ஒரு லிட்டர் டீசல் 92.13 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. அங்கு இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 16 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 27 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. நாட்டில் தொடர்ச்சியாக 9வது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேசியத் தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 89.54 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 79.95 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 91.68 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 85.01 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களாகவே பெட்ரோல், டீசல் விலைகள் தொடர் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. இதற்கு தேசிய அளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. அதேபோல சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டரின் விலையும் வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

 

Trending

Exit mobile version