வணிகம்

பெட்ரோல், டீசல் விலை திங்கட்கிழமை இரண்டு வருடம் இல்லாத அளவுக்கு உயர்வு!

Published

on

பெட்ரோல், டீசல் விலை திங்கட்கிழமை அதிகரித்ததை அடுத்து, இரண்டு வரும் இல்லாத அளவிற்கு அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை 86.21 ரூபாய் என விற்கப்பட்ட பெட்ரோல் விலை, திங்கட்கிழமை 30 பைசா அதிகரித்து 86.51 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை 78.93 ரூபாயிலிருந்து 28 பைசா அதிகரித்து 79.21 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

லிட்டர் பெட்ரோல் விலை டெல்லியில் 83.71 ரூபாய், மும்பையில் 90.34 ரூபாய், கொல்கத்தாவில் 85.19 ரூபாய். லிட்டர் டீசல் விலை டெல்லியில் 73.83 ரூபாய், மும்பையில் 80.51 ரூபாய், கொல்கத்தாவில் 77.44 ரூபாய் எனவும் விற்கப்படுகிறது. தொடர்ந்து 15வது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் 49.25 டாலர் எனவும், WTI கச்சா எண்ணெய் விலை 46.26 டாலர் எனவும் விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தினமும் காலை 6 மணிக்கு மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version