இந்தியா

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை: கைவிரித்த நிர்மலா சீதாராமன்

Published

on

நாட்டில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளது. இந்த விலை உயர்விற்கு மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகிறார்கள். பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் பெரும்பான்மையான விகிதம், மத்திய அரசு விதிக்கும் வரிகளுக்கேச் செல்கிறது.

இதனால் அந்த வரி விகிதத்தை மத்திய அரசுக் குறைக்க முன் வர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நாட்டின் சில இடங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியுள்ளது. இப்படியான சூழலில் எரிபொருட்களின் விலைகளை நிர்ணயிப்பதில் மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

‘இந்தியாவில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் தான், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

காரணம், மத்திய அரசு எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அரசுக்கு அதில் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதில் எதாவது வழிகள் இருக்கிறதா என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக அமர்ந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அதன் மூலம் எரிபொருட்களுக்கு ஒரு நியாயமான விலையை நிர்ணயிக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

 

seithichurul

Trending

Exit mobile version