தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: ரூ.100ஐ நெருங்குவதால் பரபரப்பு!

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுவதும் உயராமல் இருந்த நிலையில் தேர்தல் முடிவுகள் வெளிவந்து புதிய ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்த நிலையில் கடந்த சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் உயராமல் இருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை 23 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் ஒன்றுக்கு 93.38 ரூபாயாக விற்பனையாகி வருகிறது அதே போல் டீசல் விலை 31 காசுகள் உயர்ந்து 86.96 ரூபாயாக விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை அடுத்தே இந்த விலை ஏற்றம் என குறிப்பிடப்பட்டாலும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைத்தால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பெட்ரோல் டீசல் விலை குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் புதிய ஆட்சி பதவி ஏற்றுள்ள நிலையில் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறித்து பொதுமக்களுக்கு நன்மை செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version