தமிழ்நாடு

பெட்ரோல் ரூ.5, டீசல் விலை ரூ.10 குறைவு: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Published

on

பெட்ரோல் 5 ரூபாயும் டீசல் 10 ரூபாயும் குறைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை விண்ணை முட்டிய அளவில் உயர்ந்து கொண்டு வருகிறது என்பதும் இதனை அடுத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி இன்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் ஐந்து மற்றும் டீசல் லிட்டருக்கு ரூபாய் 10 இதனால் குறைகிறது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 101 எனவும் டீசல் விலை ரூபாய் 92 எனவும் விற்பனை ஆக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version