இந்தியா

இந்தியாவில் இருந்து நேபாளம் போய் உபிக்கு வரும் பெட்ரோல் விலை 22 ரூபாய் குறைவா?

Published

on

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் ஒரு சில மாநிலங்களில் ரூ.100ஐ தாண்டியுள்ள பெட்ரோலின் விலை விரைவில் அனைத்து மாநிலங்களிலும் ரூ.100ஐ தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசலை வாங்கும் நேபாளம் குறைந்த விலையில் பெட்ரோல், டீசலை விற்பனை செய்து வருவதால் அங்கிருந்து உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு கடத்தப்பட்டு 22 ரூபாய் குறைவாக உபியில் பெட்ரோல், டீசல் விற்பனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்தியா அனுப்பும் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் நேபாளத்தில் விலை குறைவாக விற்பனை ஆகி வருகிறது. ஏனெனில் அந்நாட்டில் பெட்ரோல் டீசலுக்கான வரி மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. நேபாளத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 70 ரூபாய் மட்டுமே. அந்த பெட்ரோல் இந்தியாவுக்கு உபி மாநில எல்லை வழியாக கடத்தி வரப்பட்டு உபி மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதனால் 22 ரூபாய் வரை உபி மாநிலத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் கிடைப்பதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நேபாளத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட பெட்ரோல் அதிகமாக விற்பனை ஆவதன் காரணமாக உபி மாநிலத்திலுள்ள பெட்ரோல் நிலையங்களில் தினமும் 1500 முதல் 1800 லிட்டர் வரை பெட்ரோல் விற்பனை சரிந்துள்ளதாகவும் இதனால் பெட்ரோல் நிலைய உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல் நேபாளத்தில் ஒரு லிட்டர் டீசல் 55 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அந்த டீசல் உபிக்கு கடத்தி வரப்பட்டு 60 ரூபாய்க்கு மட்டுமே விற்பனையாகி வருவதாகவும் கூறப்படுகிறது. விலை மிகவும் மலிவாக கிடைப்பதால் நேபாள நாட்டின் வழியாக கிடைக்கும் பெட்ரோல், டீசலை வாங்க அனைவரும் முன்வருவதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

seithichurul

Trending

Exit mobile version