தமிழ்நாடு

சென்னையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு: ரூ.102ஆக உயர்ந்தது!

Published

on

கடந்த சில நாட்களாக எண்ணெய் நிறுவனங்கள் தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வரும் நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதை அடுத்து இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பெட்ரோல் விலை 102 ரூபாயை நெருங்கிவிட்டது என்பதும், டீசல் விலை 100 ரூபாயை நெருங்கிவிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இன்றும் சென்னையில் பெட்ரோல் விலை 26 காசுகள் ஒரு லிட்டருக்கு உயர்ந்து உள்ளது என்பதும் டீசல் விலை 33 காசுகள் ஒரு லிட்டருக்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை பின்வருமாறு:

சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 101.79 ரூபாய் விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 33 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 97.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் ரூ.102க்கும், டீசல் ரூ.93க்கும் தான் விற்பனையாகிறது.

டெல்லியில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 104.44 ரூபாய் விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 0.35 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 93.17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மும்பையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 29 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 110.41 ரூபாய் விற்பனையாகி வருகிறது. அதேபோல் டீசல் லிட்டர் ஒன்றுக்கு 37 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 101.03 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version