தமிழ்நாடு

போட்டி போட்டு உயரும் பெட்ரோல் டீசல் விலை: வாகன ஓட்டிகள் கலக்கம்!

Published

on

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதை அடுத்து சென்னை உள்பட இந்தியா முழுவதிலுமிருந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்த அறிவிப்பை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை அடுத்து பெட்ரோல் விலை 105 ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இன்று சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து உள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 104.52 ரூபாய் என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் டீசல் விலை இன்று 34 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 100ரூ 100.59 என்ற விலையில் விற்பனை செய்து வருவதால் வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மத்திய மாநில அரசுகள் குறைக்காவிட்டால் பொதுமக்களின் கடும் அதிருப்திக்கு உள்ளாக வேண்டிய நிலை வரும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version