தமிழ்நாடு

சென்னையில் குறைந்தது பெட்ரோல், டீசல் விலை: மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில மாதங்களாக உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியது என்பதையும் பார்த்தோம்.

ஆனால் கடந்த சில நாட்களாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருவதை அடுத்து பெட்ரோல் டீசல் விலை இந்தியாவில் உயராமல் ஒரே விலையில் இருந்தது. இதனால் பொதுமக்கள் சற்றும் நிம்மதி அடைந்தனர்.

இந்த நிலையில் தமிழக பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டபோது பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைக்கப்பட்டதை அடுத்து நூறு ரூபாய்க்கும் குறைவாக பெட்ரோல் விலை விற்பனையாகி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் பெட்ரோல் விலை குறைய தொடங்கியது. தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைந்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் தரும் அறிவிப்பு காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை சிறிது அளவு குறைந்துள்ளது. பெட்ரோல் விலை 12 காசுகள் குறைந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை சென்னையில் ரூ.99.20 ரூபாய் என்று விற்பனை ஆகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதுபோல் டீசல் விலை 14 காசுகள் குறைந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.94.52 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version