தமிழ்நாடு

சென்னையில் குறைந்தது பெட்ரோல்-டீசல் விலை: தேர்தல் காரணமா?

Published

on

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன் தினந்தோறும் ஏறிக் கொண்டிருந்த நிலையில் 5 மாநில தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் உயராமல் உள்ளது பொதுமக்களுக்கு கொஞ்சம் திருப்தியை அளித்து உள்ளது. ஆனால் தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் உயர்ந்த விடுமோ என்ற அச்சமும் மக்கள் மனதில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை பொறுத்தவரை கடந்த சில நாட்களாக விலை மாற்றம் இன்றியும் விலை குறைந்தும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டுதான் பெட்ரோல் டீசல் விலை உயராமல் குறைந்து கொண்டு வருவதாக பொதுமக்கள் மத்தியில் ஒரு கருத்து இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதாகவும் அதனை அடுத்து பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

சென்னையில் இன்றைய பெட்ரோல் டீசல் விலை என்ன என்பதை தற்போது பார்ப்போம். சென்னையில் இன்று பெட்ரோல் விலை 19 காசுகள் குறைந்து 92.58 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதே போல் சென்னையில் டீசல் விலை 22 காசுகள் குறைந்து 85.88 ரூபாய் என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல், டீசல் விலை இதேபோல் தொடர்ந்து குறையுமா? அல்லது தேர்தல் முடிந்தவுடன் ரூ.100ஐ தாண்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending

Exit mobile version