தமிழ்நாடு

சென்னையில் ரூ.102ஐ தாண்டியது பெட்ரோல் விலை: டீசல் விலையும் உயர்வு!

Published

on

சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் முந்தைய நாள் விலையிலேயே விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை ரூ.102ஐ தாண்டி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூ.102.23 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது.அதேபோல் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 15 காசுகள் உயர்ந்துள்ளதால் ரூ.94.39 என்ற விலையில் ஒரு லிட்டர் டீசல் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை ரூபாய் ரூ.102ஐ தாண்டி ரூ.103அ நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதும் டீசல் விலை ரூ.95ஐ நெருங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

தமிழகத்தில் தொடர்ச்சியாக கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பது பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்கிறது என்பதும் போக்குவரத்துச் செலவுகள் அதிகமாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் மக்களின் நலனை கணக்கில் கொண்டு பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தவும் பெட்ரோல் டீசலுக்கு விதிக்கப்பட்ட வரியைக் குறைக்கவும் மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை விடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version