இந்தியா

முடிந்தது தேர்தல்: எதிர்பார்த்தபடியே பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு!

Published

on

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதுமட்டுமின்றி ஒருசில நாட்கள் பெட்ரோல் டீசல் விலை குறையவும் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஐந்து மாநில தேர்தல் முடிவடைந்து அதன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ஐந்து மாநிலங்களிலும் புதிய அரசு பொறுப்பு ஏற்க உள்ளது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடியே பெட்ரோல் டீசல் விலை தற்போது உயர்ந்துள்ளது.

சற்றுமுன் வெளியான தகவலின்படி பெட்ரோல் விலை இன்று 12 காசுகள் உயர்ந்து 92.55 காசுகள் எனவும், டீசல் விலை 15 காசுகள் உயர்ந்து 85.90 காசுகளாகவும் விற்பனையாகி வருகிறது. மேலும் இனி தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதே ரீதியில் தினமும் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு இருப்பதாகவும் விரைவில் பெட்ரோல் விலை ரூ.100 என உயரும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version