தமிழ்நாடு

இன்றும் பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்வு: சென்னையில் என்ன விலை?

Published

on

சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது பொதுமக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். ஆனாலும் மத்திய மாநில அரசுகள் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெட்ரோல் விலை சென்னையில் உயர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இன்றும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை 31 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் 99.80 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை 26 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து 93.72 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 99.80 என அறிவிக்கப்பட்டு இருந்தாலும் நூறு ரூபாய் கொடுத்து தான் சென்னையில் உள்ள பொதுமக்கள் பெட்ரோல் போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நாளை பெட்ரோல் விலை 100 ரூபாயை அதிகாரபூர்வமாக எட்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டிருப்பதை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்தாவிட்டால் பொதுமக்களின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளாக வேண்டிய ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் சர்வதேச அரங்கில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் விலை உயர்கிறது என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version