தமிழ்நாடு

சென்னையில் மீண்டும் பெட்ரோல் விலை ஏற்றம்: ரூ.100ஐ எட்டியதா?

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்றும் இதனால் அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்ந்து வருவதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் செய்திகளை பார்த்து வருகிறோம். மேலும் பெட்ரோல் டீசலுக்கான வரிகளை மத்திய மாநில அரசுகள் குறைக்கவேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையை காதில் வாங்கப்படாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவதால் பெட்ரோல், டீசல் விலை ஏறிக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து 99.80 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெட்ரோல் விலை சென்னையில் கிட்டத்தட்ட ரூபாய் 100 ஆகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 26 காசுகள் அதிகரித்து 93.72 ரூபாய் என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது. எனவே டீசல் விலை 94 ரூபாயை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட நகரங்களில் பெட்ரோல் விலை நூறு ரூபாயை தொட்டுவிட்டது என்பதும், ஒரு சில நகரங்களில் 101 ரூபாயை தொட்டுவிட்ட நிலையில் சென்னையிலும் கிட்டத்தட்ட நூறு ரூபாயை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடதக்கது.

seithichurul

Trending

Exit mobile version