தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராமல் இருந்தது என்பதையும் கடந்த 4 நாட்களுக்கு முன்பு வரை டீசல் விலை மட்டுமே உயர்ந்தது என்பதை பார்த்து வந்தோம்

இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டின் விலையும் உயர்ந்து உள்ளது என்ற எண்ணெய் நிறுவனங்களின் அறிவிப்பு பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே பெட்ரோல் விலை தமிழகத்தில் 100 ரூபாயை தாண்டிய நிலையில் தமிழக அரசு பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைத்ததால் நூறு ரூபாய்க்குள் பெட்ரோல் விலை வந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி வருவதால் பெட்ரோல் நூறு ரூபாயை நெருங்கி விட்டது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் டீசல் விலை 100 ரூபாயை நெருங்க வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ரூபாய் 99.36 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது. அதேபோல் சென்னையில் டீசல் விலை 28 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை 94.45 என்ற விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியும் டீசல் விலை 95 ரூபாயை நெருங்கியும் உள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version