தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை குறைவு: வானக ஓட்டிகள் மகிழ்ச்சி

Published

on

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினந்தோறும் உயர்ந்து வந்தது என்பதும் இதனால் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியது என்பதும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கியது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரே விலையில் இருந்து வருகிறது. அதேபோல் தமிழக பட்ஜெட்டில் பெட்ரோலுக்கான வரி ரூபாய் மூன்று குறைக்கப்பட்டதை அடுத்து பெட்ரோல் விலை 100 ரூபாய்க்குள் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மீண்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இன்று பெட்ரோல் விலை ரூபாய் 12 காசுகள் குறைந்ததை அடுத்து ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 99.08 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது.

அதே போல் டீசல் விலை 15 காசுகள் குறைந்துள்ளதை அடுத்து ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 93.38 என்ற விலைக்கு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் 8 நாட்களுக்கு பிறகு பெட்ரோல் டீசல் விலை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதை அடுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைத்து இருந்தாலும், மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version