தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை குறைவு: இன்ப அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த சில வாரங்களுக்கு முன் வரை அதிகரித்துக்கொண்டே இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து கடந்த ஒரு மாதமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் பெட்ரோலுக்கான வரி ரூ.3 குறைக்கப்பட்டது. இதனால் பெட்ரோல் விலை ரூபாய் மூன்று தமிழகத்தில் மட்டும் குறைந்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டீசலின் விலை குறைந்து கொண்டே வந்து நிலையில் இன்று டீசல் மட்டுமின்றி பெட்ரோல் விலையும் குறைந்துள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.

பெட்ரோல் விலை இன்று 15 காசுகள் லிட்டருக்கு குறைந்ததை அடுத்து ரூ.99.32 என விற்பனையாகி வருகிறது. அதே போல் டீசல் விலை இன்று 18 காசுகள் குறைந்துள்ளதை அடுத்து லிட்டர் டீசல் விலை ரூ.93.66 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை வீழ்ச்சி அடைந்து கொண்டே வருவதால் இனி வரும் நாட்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் தமிழக அரசு பெட்ரோலுக்கான வரியை குறைத்தது போல் டீசல் வரியையும் குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு பெட்ரோல்ம் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version