இந்தியா

பெட்ரோல், டீசல் விலை ரூ.4 குறைகிறதா? பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி உயர்ந்து கொண்டே வருகிறது என்பதும் பெட்ரோல் விலை உயர்வு காரணமாக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் டீசல் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்பட வாய்ப்புள்ளது என தகவல் வந்துள்ளது.

கடந்த 8 நாட்களில் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 77.60 டாலரிலிருந்து 68.40 டாலராக குறைந்துள்ளது. கடந்த 10 மாதங்களில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இந்திய எண்ணெய் நிறுவனங்களும் விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் சவுதி அரேபியா இடையிலான மோதல் காரணமாக உலகளாவிய அளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஆனால் கச்சா எண்ணெய் விலை சரியும் போதெல்லாம் மத்திய மாநில அரசுகள் வரியை உயர்த்தி, அந்த லாபத்தை மக்களுக்கு கிடைக்கவிடாமல் செய்து வருகிறது. இந்த முறையாவது பெட்ரோல், டீசல் விலை குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் சென்னையில் கடந்த 4 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பதும் சென்னையில் பெட்ரோல் விலை ரூபாய் 102.49 என்றும் டீசல் விலை ரூபாய் 94.39 என்றும் விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version